மாநிலங்களவை இடம் மறுப்பு நடிகை நக்மா ஏமாற்றம்

by Staff / 30-05-2022 01:16:58pm
மாநிலங்களவை இடம் மறுப்பு நடிகை நக்மா ஏமாற்றம்

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து நடிகை நக்மா ஏமாற்றம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பெயரை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது இதில் தனது பெயர் இடம்பெறாதது ஏமாற்றம் அடைந்த நக்மா தனக்குத் தகுதி இல்லையா என ட்வீட்டரில் வினவியுள்ளார். 2003 ஆம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்த போது தனக்கு மாநிலங்களில் இடம் தருவதாக சோனியா கோரியதாகவும் 18 ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்ட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via