வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

by Staff / 25-03-2022 11:08:00am
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

வடகொரிய செலுத்திய அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை முற்றிலும் அதிபர் கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட கவனிப்பு நடைபெற்றதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முற்றிலும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இதற்கு முன் வடகொரிய வெற்றிகரமாக சோதித்து பார்த்த வகையிலான இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வாசோங்ப்ஹா 17 வகை ஏவுகணையை தலைநகரம் பியாங்யாங் விமான நிலையத்திலிருந்து செலுத்தியது.

ஏவுகணை 6.200 கிலோமீட்டருக்கு தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழித்து ஜப்பான் கடற்பரப்பில் விழுந்ததாகவும் கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு வட கொரியா சோதித்த சக்திவாய்ந்த ஏவுகணை என தென் கொரியா தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான ராஜாங்க சந்திப்புக்கு பின் நீண்ட தூர ஏவுகணை சோதனை ஈடுபடாத வடகொரியா தற்போது மீண்டும் சோதனைகளில் ஈடுபட்டு உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo