திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக வெற்றி கழகம் அனுமதி மறுத்ததால் நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம்

by Editor / 09-04-2025 04:19:48pm
 திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்  தமிழக வெற்றி கழகம் அனுமதி மறுத்ததால் நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் திட்டக்குடி தொகுதியில் பேரூராட்சி, நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், கிராமப்புறங்களின் வளர்ச்சியின்மையைக் கண்டித்தும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தானியக்கிடங்கு அமைக்க கோரியும் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்பு டாடாஏசி வனத்தின் மீது ஏறி நின்று நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்ய போலீசார் அனுமதி மறுத்ததால் நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

 

Tags :

Share via

More stories