வயிற்றில் 13 ஹேர் பின்கள், 5 சேஃப்டி பின், 5 பிளேடுகள்

by Staff / 19-08-2023 12:07:43pm
வயிற்றில் 13 ஹேர் பின்கள், 5 சேஃப்டி பின், 5 பிளேடுகள்

புதுச்சேரியில் 20 வயது இளைஞர் ஒருவர் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் இருந்து 13 ஹேர்பின், 5 சேஃப்டி பின், 5 பிளேடுகளை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டதால் இளைஞர் இவற்றை விழுங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை இல்லாமல், சவாலான இந்த சிகிச்சையை எண்டோஸ்கோபி செயல்முறையில் காயம் இன்றி சுமார் 2 மணி நேரத்தில் அவற்றை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.

 

Tags :

Share via