தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்

▪️ நாகை திருக்குவளை அரசு ஐ.டி.ஐ.யில் ரூ.3.50 கோடியில் மாணவர் விடுதி
▪️ 32 அரசு ஐ.டி.ஐ.களில் ரூ.67.64 கோடியில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு
▪️ மாநிலம் முழுவதும் உள்ள 50 அரசு ஐ.டி.ஐ.களில் ரூ.22.98 கோடியில் விடுதிகள் புதுப்பிக்கப்படும்
▪️ கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ.20.25 கோடியில் அடிப்படை வசதிகளுடன் 50 மையங்கள் அமைக்கப்படும்
▪️ கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து 60 வயது நிறைவடைந்து குடும்ப கவனிப்பு இல்லாமல் சிரமப்படுவோருக்காக தலா 50 பேர் தங்கும் வகையில் சென்னையில் 2 புதிய முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும்
▪️ கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாலர்களுக்கு வழங்கப்படும் மரண உதவித்தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
▪️ கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஏற்கனவே வழங்கப்படும் கல்வி உதவித் தொகையோடு, கூடுதலாக நர்சிங், கேட்டரிங் பட்டயப் படிப்பு படிப்போருக்கும் ரூ.3000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்
Tags :