மாணவியிடம் சில்மி‌ஷம்- பள்ளி ஆசிரியர் கைது

by Admin / 30-07-2021 02:34:10pm
மாணவியிடம் சில்மி‌ஷம்- பள்ளி ஆசிரியர் கைது



ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கையற்கண்ணி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த சோலைசேரி கிராமத்தை சேர்ந்தவர் இலங்காமணி (வயது 36). ஆசிரியர்.

இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியர் இலங்காமணி மாட்டுக்கு வைக்கோல் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த வீட்டிற்கு சென்ற ஆசிரியர் தண்ணீர் வாங்கி குடிப்பது போல மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார் .

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறி கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்து ஊத்துமலை போலீசில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கையற்கண்ணி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் இலங்காமணியை கைது செய்தார்.

 

 

Tags :

Share via

More stories