அண்ணாமலை மாற்றம் செய்யப்படுவது உறுதி? - டெல்லி பாஜக ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை மாற்றம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டெல்லியில் நடந்த முக்கியமான ஆலோசனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாஜக தலைவராக அண்ணாமலை மீண்டும் தேர்வாக மாட்டார் என்றும், புதிய தலைவர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் 11-ம் தேதி பாஜக தேசிய தலைமை அறிவிக்கிறது என்றும் கூறப்படுகிறது. டெல்லியில் நடந்த ஆலோசனையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை மீண்டும் தொடரலாமா, வேண்டாமா என கலந்தாலோசிக்கப்பட்ட நிலையில், ஆலோசனையின் இறுதியில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், வரும் 11-ம் தேதி புதிய பாஜக தலைவர் யார் என்ற அறிவிப்பை பாஜக தேசிய தலைமை வெளியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Tags :