நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்... புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதா தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
2021 செப்டம்பரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் - 2021’ என்ற மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து, 2022 பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் இந்த மசோதா ஆளுநரால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துவிட்டதாக, கடந்த 4ஆம் தேதி பேரவையில் முதலமைச்சவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Tags :