ஓடும் ரயிலுக்குள் கல் வீசிய இளைஞர்.. ஒருவர் காயம்

by Editor / 05-08-2024 12:36:43pm
ஓடும் ரயிலுக்குள் கல் வீசிய இளைஞர்.. ஒருவர் காயம்

பீகார் மாநிலம் பாகல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஜெய்நகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயிலின் வெளிப்புறத்தில் இருந்து இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக கல் ஒன்றை வீசியுள்ளார். இதில், ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், கல்வீச்சால் பயணியின் மூக்கில் இருந்து ரத்தம் வடியும் புகைப்படமும் வைரலாகி வருகிறது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories