இன்று காலை 10 மணிக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
இன்று காலை 10 மணிக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கிறார். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாட்டின் 1947-இல் காங்கிரஸ் கட்சியினுடைய முதலமைச்சராக இருந்த ராமசுவாமி ரெட்டியாரிலிருந்து பக்தவச்சலம் வரை காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட முதலமைச்சர் ஆவர்.
கட்சியை வளர்த்து தாமும் வளர்ந்து , முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மக்கள் வாக்ளித்து முதலமைச்சரானவர்கள்-
மு. கருணாநிதி
ஜெ. ஜெயலலிதா
மு. க .ஸ்டாலின்
ஆகிய மூவர் மட்டுமே.
கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக கட்சி தலைமையால், முதலமைச்சராக்கப் பெற்றவர்கள்,
வி. ஆர். நெடுஞ்செழியன்
ஜானகி ராமச்சந்திரன்,
ஓ. பன்னீர்செல்வம்
எடப்பாடி கே பழனிச்சாமி.
கட்சியை தொடங்கி ; கட்சியின் தலைவராகயிருந்து; மக்களிடம் நன்கு அறிமுகமாகி , தம் சுய செல்வாக்கால் முதலமைச்சராக உருவானவர்கள்-
சி. என். அண்ணாதுரை
எம் .ஜி .ராமச்சந்திரன்
சி.ஜோசப் விஜய்
மூவரும் ஆவர்.
தமிழ்நாடு முதலமைச்சர்கள் பெயர் பதவிக்காலம் கட்சி
.ஓ.பி. ராமஸ்வாமி ரெட்டியார் 1947–1949 இந்திய தேசிய காங்கிரஸ்
பி.எஸ். குமாரசுவாமி ராஜா 1949–1952 இந்திய தேசிய காங்கிரஸ்
.சி. ராஜகோபாலாச்சாரி 1952–1954 இந்திய தேசிய காங்கிரஸ்
கே. காமராஜ் 1954–1963 இந்திய தேசிய காங்கிரஸ்
எம். பக்தவத்சலம் 1963–1967 இந்திய தேசிய காங்கிரஸ்
சி.என். அண்ணாதுரை 1967–1969 தி.மு.க
வி.ஆர். நெடுஞ்செழியன் (பொறுப்பு) 1969 தி.மு.க
எம். கருணாநிதி 1969–1976 தி.மு.க
ஜனாதிபதியின் ஆட்சி 1976–1977
எம்.ஜி. ராமச்சந்திரன் 1977–1980 அ.தி.மு.க
ஜனாதிபதியின் ஆட்சி 1980
எம்.ஜி. ராமச்சந்திரன் 1980–1987 அ.தி.மு.க
வி.ஆர். நெடுஞ்செழியன் (பொறுப்பு) 1987–1988 அ.தி.மு.க
ஜானகி ராமச்சந்திரன் 1988 அ.தி.மு.க
ஜனாதிபதியின் ஆட்சி 1988–1989
எம். கருணாநிதி 1989–1991 தி.மு.க
ஜனாதிபதியின் ஆட்சி 1991
ஜெ. ஜெயலலிதா 1991–1996 அ.தி.மு.க
எம். கருணாநிதி 1996–2001 தி.மு.க
ஜெ. ஜெயலலிதா 2001 அ.தி.மு.க
ஓ. பன்னீர்செல்வம் 2001–2002 அ.தி.மு.க
ஜெ. ஜெயலலிதா 2002–2006 அ.தி.மு.க
எம். கருணாநிதி 2006–2011 தி.மு.க
ஜெ. ஜெயலலிதா 2011–2014 அ.தி.மு.க
ஓ. பன்னீர்செல்வம் 2014–2015 அ.தி.மு.க
ஜெ. ஜெயலலிதா 2015–2016 அ.தி.மு.க
ஓ. பன்னீர்செல்வம் 2016–2017 அ.தி.மு.க
எடப்பாடி கே. பழனிசாமி 2017–2021 அ.தி.மு.க
எம்.கே. ஸ்டாலின் 2021–2026 தி.மு.க
ஜோசப் விஜய் 10.05.206 லிருந்து த.வெ.க
Tags :


















