1200 கிலோ ரேஷன் அரிசி, 170 கிலோ துவரம் பருப்பு... வீட்டையே ரேஷன் கடையாக மாற்றி மெகா கடத்தல் - பெண் கைது!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டையே ரேஷன் கடையாக மாற்றி மெகா கடத்தலுக்கு திட்டம் போட்ட சம்பவம் அம்பலமாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த எல்.என்.புரம் பகுதியில் சட்டவிரோதமாக அதிக அளவில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கடலூர் வருவாய்த்துறை பறக்கும் படை குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பறக்கும் படை குழுவினர் எல்.என்.புரம் பகுதியில் சல்லடை போட்டு சோதனை மேற்கொண்டனர்.
அதில் சாந்தி என்பவர், தனது வீட்டில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைத்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிரடியாக உள்ளே புகுந்து தேடியதில் 1200 கிலோ ரேஷன் அரிசி, 9 சமையல் எரிவாயு சிலிண்டர், 70 லிட்டர் மண்ணெண்ணெய், 170 கிலோ துவரம் பருப்பு, 25 கிலோ கோதுமை மற்றும் அரசு முத்திரை கொண்ட காலி சாக்குகள் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருப்பது கண்டு அதிர்ந்து போனார்கள்.
Tags :