ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை - இளைஞர் தப்பியோட்டம்

by Staff / 13-10-2022 03:27:14pm
 ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை - இளைஞர் தப்பியோட்டம்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனியார் கல்லூரியில் படிக்கும் சத்யா (20), என்ற மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்ற இளைஞர் தப்பி ஓடினார். ரயில் நிலையத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு வந்துகொண்டிருந்த மின்சார ரயிலின் முன்பு, சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார்.இதனை அடுத்து, தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via
Logo