வெறும் விளம்பரமும் பகட்டான பேச்சுக்களும் இனி எடுபடாது -ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டி காலகட்டம் இது..

by Admin / 09-06-2024 02:33:48pm
 வெறும் விளம்பரமும் பகட்டான பேச்சுக்களும் இனி எடுபடாது -ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டி காலகட்டம் இது..

ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படை காரணம்rஒய்.எஸ்.ஆா். ஜெகன்மோகன் ரெட்டி ஒர் அதீதமான தைரியத்தின் காரணமாகவே தன் தோல்வியை தழுவியுள்ளார்.

மக்களின் அன்றாட பிரச்சனைகளில் கவனம் செலுத்தாது. விலைவாசியை கட்டுப்படுத்தாமல்..- தன் தந்தை சிலைகளை வைப்பதில் காட்டிய ஆர்வமும் எதிர்க்கட்சிகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்கிற நினைப்பும் செயலும், தன் குடும்பத்திற்குள்ளே இருந்து தனக்கு எதிராக இன்னொரு அரசியல் களத்தில் தன் சகோதரியை வளர விட்டது அவர் செய்த மிகப்பெரிய தவறு    .தனித்து போட்டுயிட்டதும்.  இதற்கு ஒரு மற்றொரு காரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது.. இந்தியாவிற்கு அப்பால் இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக அவர் சார்ந்த சமூக மென்பொருள்பொறியாளர்கள் ,நடுநிலை வகிக்கும் மற்ற மாநிலங்களில் வகிக்கும்  தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்களின் பற்றும் அவர்கள் செயல்பாடுகள் சந்திரபாபு நாயுடுவை பலம் பொருந்திய ஒர்அரசியல் கட்சி தலைவராக உருவாக்கியது.

இன்றைக்கு இந்தியஜனநாயக கூட்டணியில் தவிர்க்க முடியாத ஒர் அங்கமாக -எதையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு சக்தியாக வளர்த்தெடுப்பதற்கு அடித்தளம் இட்டது. இது சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு வெற்றியாக இருந்தாலும் ஒட்டுமொத்த தெலுங்கு மக்களினுடைய உணர்வாகவே இது இருந்தது,  இருந்து வருகிறது.. தெலுங்கானாவில், சந்திரசேகர ராவ்  இப்பொழுது ஜெகன்மோகன் ரெட்டி. இருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ,மக்களின் கோபத்திற்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடைய ஆட்சி அதிகாரங்கள் வாக்குகளின் மூலமாக பறிக்கப்பட்டு இருப்பது, இந்திய ஜனநாயகத்தில் அதிகாரம் உடைய -தனிப்பட்ட மனிதர்கள் தோல்விகளை நோக்கி செல்வார்கள் என்பதற்கு ஒரு பாலபாடம்.

. உத்தர பிரதேசம்,  ஒரிசா போன்ற மாநிலங்கள்கள் இதற்கு சான்றாக அமையும்.. தமிழ்நாட்டில் தி.மு.கவினுடைய வெற்றியும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜினுடைய வெற்றியும் மக்களை நோக்கி அரசு செல்கிறது என்கிற காரணத்தினால்..... இந்த இரு கட்சிகளும் பலம் பொருந்திய கட்சியாக மீண்டும் உருவெடுத்ததோடு- தம் பலத்தையும் தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியாளர்கள், மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி.... அவர்களுக்கு தேவையானவற்றை அளிக்கின்ற பட்சத்தில் ,மக்கள் அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்களை மீண்டும் அதே இடத்தில் உட்கார வைத்திருப்பது என்பது அவர்கள் மீண்டும் மக்களுக்கான பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான்.

.சில கட்சிகளின் அதிகார வரம்புகளை குறைப்பதற்கான முயற்சியில் மக்களினுடைய வாக்குகள் அளிக்கப்பட்டதும் அவர்களுக்கு ஒர் எச்சரிக்கைப் போன்று தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆக, மக்கள் அவர்களினுடைய நிலைப்பாட்டை உணர்ந்து தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதி தான் தவறாக மக்களை எடை போட்டு உள்ளார்கள் என்பது இந்த தேர்தல் நிறுவிக்கின்றது. வெறும் விளம்பரமும் பகட்டான பேச்சுக்களும் இனி உள்ள காலங்களில் எடுபடாது. . மக்களினுடைய பணி முதன்மையாக்கப்பட்டுள்ளது என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டி காலகட்டம் இது..

 

 

Tags :

Share via