வெறுப்புக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை: டிரம்ப் ஆவேசம்

by Editor / 22-05-2025 03:24:45pm
வெறுப்புக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடந்த தாக்குதலில் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் 2 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் பாலஸ்தீன ஆதரவு நபர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், வெறுப்புக்கும், தீவிரவாதத்துக்கும் அமெரிக்காவில் இடமில்லை. மத விரோத போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via