நாய் மீது அரசு பஸ் மோதி விபத்து : ஓட்டுநர் சஸ்பெண்ட்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை செக்கானுள்ளி கிளையில் டிரைவர் நமச்சிவாயம் என்பவர் கடந்த 9ம் தேதி அரசு பணிமனையில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை இயக்கிவந்துள்ளார். காலை 6மணியளவில் பேருந்தை இயக்கும்போது நாய் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாய் கால் உடைந்தது. இதை பார்த்த வழக்கறிஞர் ஒருவர் பணிமனைக்கு புகார் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் விசாரணை செய்த நிர்வாகம் அது உண்மை என கண்டறியப்பட்டதோடு நாய்க்கு சிகிச்சை அளிக்காமல் பணியில் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாக அரசு பணிமனை நிர்வாகம் ஓட்டுனர் நமச்சிவாயத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய காரணத்திற்காக அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்த சம்பவம் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : நாய் மீது அரசு பஸ் மோதி விபத்து : ஓட்டுநர் சஸ்பெண்ட்.