தலைமைச் செயலக ஊழியர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்
தலைமைச் செயலக ஊழியர்கள் முகக்கவசம் அணியாவிடில் ரூ.200 அபராதமாக விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தலைமைச் செயலக ஊழியர்கள், பார்வையாளர்கள் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தலைமைச் செயலக ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ரூ.200 அபராதமாக விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமைச் செயலக ஊழியர்கள், பார்வையாளர்கள் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Tags :