பாலியல் வன்கொடுமையில்  ஈடுபட்ட இரண்டு காவலர்கள்பணி நீக்கம் செய்ய நடவடிக்கை.

by Staff / 30-09-2025 11:08:02pm
பாலியல் வன்கொடுமையில்  ஈடுபட்ட இரண்டு காவலர்கள்பணி நீக்கம் செய்ய நடவடிக்கை.

பாலியல் வன்கொடுமை ஈடுபட்ட இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்து உத்திரவிடப்பட்டுள்ளதாகவும் பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது .

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
30 ஆம் தேதி அதிகாலை 2:30 மணி அளவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது உடைய பெண் தன் வளர்ப்பு தாயுடன் மற்றொரு உறவினருடன் திருவண்ணாமலை நகரில் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு காத்திருந்தபோது புறநகர் பகுதியில் சுரேஷ் ராஜன் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு காவலர்களால் அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.

 இதனை தொடர்ந்து காவல்துறை உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ உதவி கிடைப்பதற்கு வகை செய்து உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கொடுங் குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு காவலர்களையும் துரிதமாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 இவ்விரு காவலர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட இரு காவலர்கள் துறை ரீதியான உயர்ந்த பட்ச தண்டனையான பணி நீக்கம் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

Tags : பாலியல் வன்கொடுமையில்  ஈடுபட்ட இரண்டு காவலர்கள்பணி நீக்கம் செய்ய நடவடிக்கை.

Share via