கூட்டணி நாடுகள் அமெரிக்க மக்களுக்கு முதுகில் குத்திவிட்டன .அமெரிக்கா அதிபர்டிரம்ப்

by Admin / 09-04-2026 01:59:47pm
கூட்டணி நாடுகள் அமெரிக்க மக்களுக்கு முதுகில் குத்திவிட்டன .அமெரிக்கா அதிபர்டிரம்ப்

 


ஈரான் மோதலில் அமெரிக்காவுக்கு உதவ மறுத்த நேட்டோ நாடுகளை டிரம்ப் கோழைகள் என்று விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்கா இல்லையென்றால், நேட்டோ வெறும் பேப்பர் புலி என்றும் அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.ஹார்முஸ் ஜலசந்தியைமீண்டும் திறக்க நேட்டோ நாடுகள் உதவ முன்வரவில்லை என்பது டிரம்பின் முக்கிய புகாராகும். ஜெர்மனி போன்ற நாடுகள் இதுநேட்டோவின் போர் அல்ல என்று கூறி ஒதுங்கிக் கொண்டன.கூட்டணியில் விரிசல்: இந்த மோதலால் நேட்டோவுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி நாடுகள் அமெரிக்க மக்களுக்கு முதுகில் குத்திவிட்டன என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறக்கூடும் என்ற அச்சம் தற்போது வலுவாக எழுந்துள்ளது. எங்களுக்குத் தேவைப்பட்ட போது நேட்டோ அங்கு இல்லை, இனி தேவைப்படும் போதும் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று டிரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்று, அங்கிருக்கும் தங்களுக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு மாற்று திட்டத்தையும்  உதவாத நாடுகளுக்குத் தண்டனை அளிக்கும் விதமாக,டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.2023-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, அமெரிக்க நாடாளுமன்றத்தின்  முறையான ஒப்புதல் இன்றி  தன்னிச்சையாக நேட்டோவிலிருந்து வெளியேற முடியாது

 

Tags :

Share via
Logo