மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு
மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. தேர்தல் நடைபெற உள்ள சூழலில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்க விசாரித்த நீதிபதிகள் தேர்தல் காலங்களில் அதிகாரிகளின் இடமாற்றம் என்பது முழுமையாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று தெரிவித்ததோடு தேர்தல் ஆணையம் ஏற்கனவே இது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருவதால் நிர்வாக ரீதியான இத்தகைய முடிவுகளின் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.. தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்காக அரசு அதிகாரிகளை இடம் மாற்றம் செய்யும் சிறப்பு அதிகாரங்களை பெற்றுள்ளது .
Tags :



















