கணவனே மனைவி எட்டு தொண்டாக வெட்டி கொலைசெய்த கொடூரம்.

by Editor / 11-11-2024 06:16:43pm
கணவனே மனைவி எட்டு தொண்டாக வெட்டி கொலைசெய்த கொடூரம்.

திருவண்ணாமலை கோபுரம் 1வது தெருவில் கணவனே மனைவி எட்டு தொண்டாக வெட்டி கிருஷ்ணகிரி சூலூர் காட்டுப்பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தனது மகளை காணவில்லை என சரண்யாவின் தாய் காவேரி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் சரண்யாவின் கணவரை கைது செய்து விசாரணை செய்ததில் தனது மனைவியை கொலை செய்து எட்டு துண்டுகளாக வெட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூர் வனப்பகுதியில் ஆங்காங்கே வீசியது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து கோபிநாத்தை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் சென்று போலீசார் இறந்த சரண்யாவின் தலை மற்றும் தொடை ஆகிய இரண்டு பாகங்களை கண்டறிந்து இன்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக கொண்டு சென்றனர். இந்த ஆய்வில் இறந்தது சரண்யா தான் என தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த கோபியின் தாய் சிவகாமி, கோபி நண்பர் விஜயராகவன் ஆகிய இரண்டு நபர்களின் கைது செய்து 3 கொலை குற்றவாளிகளையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

உடற்கூறு ஆய்வு முடிந்து சரண்யாவின் சொந்த ஊர் அரசுடையாம்பட்டி கிராமத்திற்கு உடல் பாகங்கள் கொண்டுவரப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று சரண்யாவின் உடல் பாகங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது. சரண்யாவின் உடல் பாகங்களை கண்ட உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பார்ப்போர் மனதை கலங்க வைத்தது. 
 

 

Tags : கணவனே மனைவி எட்டு தொண்டாக வெட்டி கொலைசெய்த கொடூரம்.

Share via