இந்தியா தடுப்பூசி பற்றாக்குறை நாடாக மாறிவிட்டது: பிரியங்கா காந்தி தாக்கு
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நாடாக மாறிவிட்டது, என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தடுப்பூசி திட்டம் என்பது தொடக்கத்தில் இருந்தே, பிரதமர் மோடியின் தனிப்பட்ட விளம்பரத்துக்கான கருவியாகவே பயன்படுத்தப்பட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் மட்டும்தான் உள்ளது என்றும், மற்ற பொறுப் பெல்லாம் மாநிலங்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது என்றும் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, தற்போது தடுப்பூசிகளுக்கு வெளிநாடுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது என்றும், ஆறரை கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்ததே இதற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.தடுப்பூசி திருவிழாவுக்கு பிறகு, தடுப்பூசி போடுவதில் 83 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும், தடுப்பூசி பற்றாக்குறை நாடாக தற்போது இந்தியா மாறிவிட்டது என்றும், பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
Tags :