அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல்-4பேர் கைது.

மதுரை மாவட்டம் மங்கல்ரேவு பகுதியில் நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது கட்சிக்காரர்களுடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அமமுகவினர் இடைமறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது, இத்தாக்குதலில் அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், தினேஷ்குமார் புகாரின் அடிப்படையில் சேடப்பட்டி காவல் நிலையத்தில் தாக்குதல் ஈடுபட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு ஒன்றை அளித்தார்,
இந்நிலையில் இந்த வழக்கில் தேனி வல்லாபுரம் அமமுக சேடபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, அமமுக உறுப்பினர் பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க பொதுக்குழு உறுப்பினர் ஒபிஎஸ் அணியை சேர்ந்த குபேந்திரன், அஜய் உள்ளிட்ட நான்கு பேரை சேடபட்டி தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
Tags : அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல்-4பேர் கைது.