வங்கியிலிருந்து பணம் எடுத்து வருபவர்களை குறிவைத்து கைவரிசை 7 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை அடுத்த பல்லாவரத்தில் வங்கியிலிருந்து பணம் எடுத்து வருபவர்களை குறிவைத்து கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.சாயாதவுல என்பவர் தாம் தனியார் வங்கியில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து வந்தபோது தன்னைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச் சென்றதாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் பணம் எடுத்துச் சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் பைக்கில் பின்தொடர்ந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 70க்கும் மேற்பட்ட சிசிடிவி களை ஆய்வு செய்த போலீசார் அந்த பைக் போரூரில் நின்று கொண்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இரண்டு நாட்கள் கழித்து அந்த வாகனத்தை எடுக்க வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவன் மூலம் அவனது கூட்டாளிகள் 6 பேரையும் பிடித்து கைது செய்தனர்.
Tags :