இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை தற்காலிக மகிழ்ச்சி ஏக்கத்தில் மக்கள்

பங்குச்சந்தை வீழ்ச்சியை தொடர்ந்து, தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை அதிகம் பாதித்து வருகிறது.பங்குச்சந்தை வீழ்வதாலும், போர் சூழல்களாலும், பலரும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தேவை அதிகரித்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே நேற்று (மார்ச் 17) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.8210-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.65,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 18) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8250-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை தற்காலிக மகிழ்ச்சி ஏக்கத்தில் மக்கள்