பள்ளி, கல்லூரிகளை சிறப்பாக நடத்த 12 கல்வியாளர்கள் கொண்ட ஆலோசனை குழு
பள்ளி, கல்லூரிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு கல்வி நிறுவனங்களை நடத்தும் 12 முக்கிய பிரமுகர்களை கொண்டு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை மேம்படுத்த அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் புதியதாக தொடங்கப்படவுள்ள பள்ளி, கல்லூரிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு கல்வியாளர்களை கொண்ட ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என கமிஷனர் அரசிடம் கோரிக்கை வைத்தார்.
அதன் அடிப்படையில் அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்து இந்து அறநிலையத்துறை சார்பாக செயல்படும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் புதியதாக தொடங்கவுள்ள பள்ளி, கல்லூரிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு கல்வி நிறுவனங்களை நடத்தும் 12 முக்கிய பிரமுகர்களை கொண்டு ஆலோசனை குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கல்வி ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர் விவரம் வருமாறு:-
1. ஆர்.எஸ்.முனிரத்னம் ஆர்.எம்.கே. கல்வி குழும நிறுவனத் தலைவர்.
2. கருமுத்து கண்ணன் தலைவர், தியாகராஜா பொறியியல் கல்லூரி- மதுரை.
3. என்.தேவராஜன் சென்னை பப்ளிக் பள்ளி குழுமம், சென்னை.
4. வேல்முருகன்- வேலம்மாள் கல்வி குழுமம், சென்னை.
5. பி.புருஷோத்தமன் தாளாளர், எவர்வின் கல்வி குழுமம், சென்னை.
6. பி.ராஜேந்திரன்- டி.ஏ.வி. கல்வி குழுமம், ஆதம்பாக்கம்.
7. சேதுகுமணன், சேது பாஸ்கரா கல்வி குழுமம், சென்னை.
8. ஆர்.அண்ணாமலை டிரஸ்டி, கற்பக விநாயகம் கல்வி அறக்கட்டளை, சென்னை-புதுக்கோட்டை.
9. வி.ஜெகன்நாதன் பொது மேலாளர், பி.எஸ்.ஜி. கல்வி குழுமம், கோவை.
10. முனைவர் ஜெ.அஜித் பிரசாத் ஜெயின், கல்வி ஆலோசகர், சென்னை.
11. டாக்டர். பொன் கோதண்டராமன், முன்னாள் துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்.
12. முனைவர் ம.ராஜேந்திரன், முன்னாள் துணைவேந்தர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
Tags :