அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள் அடைக்கப்படுவது உறுதிப்படுத்தப்படுமா?

by Staff / 10-08-2024 12:47:04pm
அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள் அடைக்கப்படுவது உறுதிப்படுத்தப்படுமா?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்குவதை தடுப்பதற்காகவும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது அரசு பேருந்துகளில் சில ஓட்டுனர்களின் அலட்சியத்தால் தானியங்கி கதவுகள் அடைக்கப்படுவதில்லை. குறிப்பாக செங்கோட்டை - கடையநல்லூர், செங்கோட்டை - மதுரை, தென்காசி - அம்பாசமுத்திரம், பாபநாசம் - நெல்லை உள்ளிட்ட

பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வரும் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் அடைக்கப்படாமல் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அபாயகரமான முறையில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து அரசு பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அடைக்கப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

Tags :

Share via