செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் முகாந்திரம் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்த நிலையில், மார்ச் 4ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளித்த உத்தரவிட்டு, இவ்வழக்கு அன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜுன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவலும் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், 22வது முறையாக நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags :



















