பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மாவல் தாலுகா தலேகான் நகரில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர் பிரபல தொழிலதிபர் மற்றும் ஜனசேவா விகாஸ் சமிதியின் நிறுவனர் கிஷோர் அவேர் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். முதலில் அவர் மர்ம நபர்களால் சுடப்பட்டார். பின்னர், பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :