,2026-இல் மீண்டும் தி.மு.க வெற்றி பெற்று, திராவிட மாடர்ன் ஆட்சி 2..0 அமையும்.-முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்..
இன்று திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலை ம லபாம்பாடி பகுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது .
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு .க .ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.. சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,திருவண்ணாமலை, விழுப்புரம்,,,, கடலூர் ஆகிய வடக்கும் மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1..30 லட்சம் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகளை தயார்படுத்துவதும் தேர்தல் வீகங்களை வகுப்பதும் இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமாக இருந்தது.. 2026 தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்றும் அதற்கான அடித்தளமே இந்த மாநாடு என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என்ற புதிய முழக்கத்தை திமுக இளைஞரணி முன் வைத்துள்ளது.
இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் ,2026 இல் மீண்டும் திமுக வெற்றி பெற்று திராவிட மாடர்ன் ஆட்சி 2.0 அமையும் என்று அறிவித்தார். கட்சியின் வாக்கு வங்கியை வலுப்படுத்தவும் குறிப்பாக ,புதிய மற்றும் இளம் வாக்காளர்களை கவரவும் 5 லட்சம் புதிய உறுப்பினர்களை இணைத்து இளைஞர் அணியை முழுமையாக மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய அரசியல் கட்சிகளால் இளம் வாக்காளர்கள் கவரப்படுவதை தடுக்கும் வகையில் அடிமட்ட அளவில் கட்சி கட்டமைப்பை வலியுறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இளைஞர்களிடையே திராவிடக் கொள்கைகளை நவீன வடிவில் கொண்டு செல்ல புதிய சித்தாந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
.திருவண்ணாமலையை தொடர்ந்து தெற்கு கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களிலும் இதே போன்று நிர்வாகிகள் சந்திப்புகளை நடத்தி தேர்தலுக்கு தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளது..
மாநாட்டிற்கு வந்திருந்த நிர்வாகிகளுக்கு மதிய உணவு மற்றும் திமுக வரலாற்று புத்தகங்கள் வழங்கப்பட்டன . 91 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய இந்த வடக்கு மண்டல சந்திப்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. கீழ்பென்னாத்தூரில் கலைஞர்சிலையையும் முதலைமச்சா் திறந்து வைத்தாா்.
Tags :



















