காங்கிரஸ் வெற்றி.. ஸ்டாலின் வாழ்த்து

by Staff / 13-05-2023 03:43:46pm
காங்கிரஸ் வெற்றி.. ஸ்டாலின் வாழ்த்து

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 55 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் “பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via