ஐ.பி.எல் 2021 கிரிக்கெட் தொடர்  அரபு அமீரகத்தில் நடைபெறும் -  பி.சி.சி.ஐ அறிவிப்பு.

by Editor / 29-05-2021 04:33:44pm
 ஐ.பி.எல் 2021 கிரிக்கெட் தொடர்  அரபு அமீரகத்தில் நடைபெறும் -  பி.சி.சி.ஐ அறிவிப்பு.




14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி, ரசிகர்கள் இன்றி தடுப்பு கொரோனா நடவடிக்கைகளுடன் நடைபெற்று வந்தது. சென்னை, மும்பையில் நடைபெற்ற போட்டிகளில் தற்போது டெல்லி, அகமதாபாத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த மே 4 ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஐ.பி.எல் போட்டித்தொடர் தள்ளிவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது. பி.சி.சி.ஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா 2021 ஐ.பி.எல் போட்டித்தொடர் தள்ளி வைக்கப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்தார். 
இந்நிலையில், இந்த சீசனுக்காக ஐபிஎல் போட்டித்தொடர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதனால் ஐ.பி.எல் ரசிகர்கள் மமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories