காசா மீதான இஸ்ரேல் குண்டு வீச்சு  காரணமாக 30 பேர் கொல்லப்பட்டனர்.

by Admin / 25-09-2025 07:16:35pm
காசா மீதான இஸ்ரேல் குண்டு வீச்சு  காரணமாக 30 பேர் கொல்லப்பட்டனர்.

காசா மீதான இஸ்ரேல் குண்டு வீச்சு  காரணமாக 30 பேர் கொல்லப்பட்டனர். மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலிய ராணுவ தாக்குதலில் அதிகாலை முப்பது பாலிசீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன/ இறந்தவர்களில் 11 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கிரேக்கத்திற்கு தெற்கே சில படகுகள் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாகவும் இது காசா மீதான கடல் முற்றுகையாக கருதப்படுகிறது .இத்தாலி, ஸ்பெயின் தங்கள் கடற்படை கப்பல்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றதாகவும் தெற்கு இஸ்ரேலிய நகரான ஈராட்டில் ஏமனின் கவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஆளில்லா விமானம் இஸ்ரேலின் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அரணை உடைத்ததில் 22 பேர் காயமடைந்துள்ளனர். காசா மீதுஇஸ்ரேல்  போர் தொடுத்ததில் 2023 இருந்து இதுவரை 65,419 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 160 பேர் காயமடைந்துள்ளதாகவும் பலர் இடிபாடுகளுக்கு இடையில்சிக்கி  இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இஸ்ரேலியர்கள் 1139 பேர் கொல்லப்பட்டதாகவும் 200 பேர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

 

Tags :

Share via