மாதவிடாய் பிரச்சினை இயற்கையான முறை

by Editor / 24-05-2022 09:17:49pm
மாதவிடாய் பிரச்சினை இயற்கையான முறை

சுழற்சி ஒன்றிரண்டு மாதம் தவறிவந்தால் தானாக சரியாகிவிடும். தள்ளிப்போகும் மாதவிடாயை இயற்கையான முறையில் வரவழைக்க :

• பப்பாளிப்பழம் சாப்பிடலாம் இது உடலில் அதிக வெப்பத்தை  உருவாக்கி மாதவிடாயை வரவைக்கும். 

• எள்ளை வெறும் வாணலியில் வறுத்து அத்துடன் வெல்லத்தை சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது எள்ளு உருண்டை கடைகளில் கிடைக்கும் வாங்கி சாப்பிடலாம் முடிந்தால் வீட்டில் செய்து சாப்பிடலாம். எள்ளு உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு வெல்லம் இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது, இரண்டும் சேர்ந்து மாதவிடாயை தூண்டும். 

• வெல்லம் சேர்ந்த இஞ்சி சாறு ஒரு  டம்ளர் குடிக்க உங்கள் மாதவிடாய் சுழற்சியை வரவழைக்க உதவும். 

• அன்னாச்சிப்பழம் (பைன் ஆப்பிள்) உடல் உஷ்ணத்தை தூண்டக் கூடியது, இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் வர தூண்டுதலாக அமையும்.

• மாதவிடாய் சீரான முறையில் வரவழைக்கும் மருத்துவ குணம் இலவங்கப்பட்டை தேநீருக்கு உண்டு. காலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

தொடர்ந்து மூன்று நான்கு தடவைக்கு மேல் பிரச்சனையாக இருந்தால் வாழைப்பூ சிறந்த பலன் தரும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் உடல் நலக்குறைபாடுகள் அனைத்தையும் போக்கும் மருந்து வாழைப்பூ. ஒரு மாதம் ஏதாவது ஒரு வகையில் மதிய உணவில் வாழைப்பூவை கூட்டாக, பொரியலாக, சூப்பாக சாப்பிட வேண்டும். 

அது போக மாதவிலக்கு சமயங்களில் வாழைப்பூவை கஷாயம் செய்து அருந்த வேண்டும். 

பெண்களுக்கு பயன் தரக்கூடிய வாழைப்பூ கஷாயம் 

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன் 

இஞ்சி - 5 கிராம்
பூண்டு பல் - 5
நல்ல மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 5 இணுக்கு 

அனைத்தையும் சேகரித்து  இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, கருப்பை அடைப்பு, வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் அனைத்து வலிகள்,  மாதவிலக்கு சீரற்ற தன்மை, குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள் போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

 

Tags :

Share via