நடிகர் மாரிமுத்து மறைவு - முதலமைச்சர் இரங்கல்

by Staff / 08-09-2023 05:14:22pm
நடிகர் மாரிமுத்து மறைவு - முதலமைச்சர் இரங்கல்

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு பல்வேறு தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். மாரிமுத்துவை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via