சாதிவாரி கணக்கெடுப்புக்கு தீர்மானம்: ராமதாசு கோரிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தெலங்கானாவில் சமூகநீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை பேரவையில் காங்கிரஸ் அரசு கொண்டு நிறைவேற்றியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான காரணங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் மிகவும் அதிகம். சமுகநீதியின் தொட்டில் என்று ஒரு காலத்தில் போற்றப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் தான் இன்னும் இட ஒதுக்கீடு பரவலாக்கப்படவில்லை. 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அந்த பிரிவினரின் மக்கள்தொகை 69சதவீதத்துக்கும் அதிகம் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டாயம். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள், சொந்த வீடு இல்லாத குடும்பங்கள், கல்வியறிவு பெற்ற குடும்பங்கள் போன்ற விவரங்களை துல்லியமாக திரட்டுவதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான் ஒரே தீர்வு. எனவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
Tags :



















