அதிமுக மெல்ல மெல்ல சரிந்துகொண்டிருக்கிறது-சுப.வீரபாண்டியன்.

by Editor / 14-07-2024 11:28:10pm
அதிமுக மெல்ல மெல்ல சரிந்துகொண்டிருக்கிறது-சுப.வீரபாண்டியன்.

மயிலாடுதுறையில் திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேட்டி அளித்தார்.
கலைஞரைப் பற்றி சீமான் தரக்குறைவாவும், அநாகரிகமாகவும் விமர்சிப்பது தொடர்ந்தால், சீமானைப் பற்றி விஜயலெட்சுமி என்னென்ன பேசியுள்ளாரோ அதனை பொதுவெளியில் மக்களுக்கு எடுத்துச்சொல்வோம். தரக்குறைவான அரசியலை தமிழகத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் சீமானை கண்டிக்கிறோம்.மோடி அரசியலுக்கான எதிர்நிலைக்கருத்து இந்தியா முழுவதும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்திருந்தால் அதைப்பற்றி தேர்தல் ஆணையத்தில் பாமக புகார் அளிக்கலாம். எல்லா தேர்தலிலும் இத்தகைய குற்றச்சாட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது.

 அதிமுகவுக்கு தலைமை இருக்கிறதா என்றே கேள்வி இருக்கிறது. அதிமுக மெல்ல மெல்ல சரிந்துகொண்டிருக்கிறது. அதனை பாஜக திட்டமிட்டு அழித்துக்கொண்டிருக்கிறது. வெளியில் இருக்கும் நமக்கு தெரிகிறது. அது அதிமுகவுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை என்றார்.

 

 

Tags : அதிமுக மெல்ல மெல்ல சரிந்துகொண்டிருக்கிறது-சுப.வீரபாண்டியன்.

Share via