ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 223 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் விலை திங்கட்கிழமையன்று சுமார் 3 சதவீதம் அளவிற்கு ஏற்றம் கண்டபோது, இந்த நிலையை அடைந்தது.
மேலும், ஐஃபோன், மேக்புக் மற்றும் ஆப்பிள் டிவி போன்றவற்றை நுகர்வோர்கள் அதிகம் நாடும் நிலையில் முதலீட்டாளர்கள் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி குவிக்கின்றனர்.
இந்த சாதனையை படைத்த முதல் நிறுவனம் என்ற பெருமையையும் ஆப்பிள் நிறுவனம் பெற்றது.
ஆனால் வர்த்தகம் முடிவில் அதன் மதிப்பு சற்று குறைந்தது. ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 186 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடனும், ஆல்ஃபாபெட், அமேசான், டெஸ்லா ஆகியவை சுமார் 74 லட்சம் கோடி ரூபாய் என்ற சந்தை மதிப்பையும் எட்டியுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
Tags :