சோதிக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம் - பிரதமர் மோடி
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கும் நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மத்திய அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை தெரிந்தும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது, அவர்களுக்குள்ளே அவநம்பிக்கை நிறைந்துள்ளதை காட்டுகிறது. அதனை சோதிக்கவே நம்பிக்கையில்லாத் தீர்மானம்” என தெரிவித்துள்ளார்.
Tags :