பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 25-09-2023 01:08:47pm
பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ந ல்லூர் நெடுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா , இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு , இவரது ஒரு மகன் ஜெயசூர்யா (21 ) , பி. இ முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். பணிபுரிந்து வந்தவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான மார்த்தாண்டத்திற்கு வந்துள்ளார் , இந்நிலையில் கடந்த சில தினங்களாக யாரிடமும் பேசாமல் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலை நேற்று இரவு தூங்கச் சென்றவர், இன்று காலையில் வெகு நேரம் ஆன பின்பும் அறை கதவு திறக்காமல் பூட்டிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்த போது அவர் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை அடுத்து விரைந்து வந்த போலீசார் ஜெயசூர்யாவின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் ஜேயசூர்யா , காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது விரும்பிய வேலை கிடைக்கவில்லையா எனவும் , தற்கொலைக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப்பாவிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via
Logo