உடல் உறுப்பு தானம் - அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு

by Staff / 25-09-2023 01:00:58pm
உடல் உறுப்பு தானம் - அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு

பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via