நவீன முன்னேற்றத்துடன் நமது பழங்கால விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாட்கள் குஜராத் கீர் சோமநாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். 1026 ஆம் ஆண்டு முகமது கஜினியின் முதல் தாக்குதலுக்கு பிறகு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பிரதமர் பரங்கேற்றார். ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆரத்தி செய்து பிரதமர் மோடி வழிபட்டார். சனிக்கிழமை இரவு ஓங்கார மந்திரம் முழங்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்றார். கோவிலை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் 108 குதிரைகளுடன் நடைபெற்ற கலாச்சார ஊர்வலத்திலும் பிரதமர் கலந்து கொண்டார் அந்நிகழ்வில் அவர் பாரம்பரிய உடுக்கை வாசித்தார். கோவில் வளாகத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மற்றும் வீர ஜமீர் ஜி கோகில் ஆகியோரின் சிலைகளுக்கு மலர் தவி மரியாதை செலுத்தினார். சனிக்கிழமை இரவு 3 ஆயிரம் டோன்கள் பங்கேற்ற பிரமாண்ட ஒளி மற்றும் ஒலி காட்சியினை பார்வையிட்டார். சோமநாத் கோவில் அறக்கட்டளை தலைவராக இருக்கும் பிரதமர் மோடி,காலனித்துவ அடையாளங்களை அகற்றி, நமது சொந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் பெருமை கொள்ள வேண்டும்
காசி விஸ்வநாத் காரிடார், அயோத்தி ராமர் கோவில், மற்றும் உஜ்ஜைனி மஹாகால் லோக் போன்ற திட்டங்களை இந்தியாவின் கலாச்சார மீளுருவாக்கத்தின் அடையாளங்களாக ... "விகாஸ் பி, விராசாத் பி" (வளர்ச்சியும் வேண்டும், பாரம்பரியமும் வேண்டும்) என்ற முழக்கத்தின் மூலம், நவீன முன்னேற்றத்துடன் நமது பழங்கால விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.இந்தியாவின் கலாச்சார பெருமையையும் மீட்டு உருவாக்கத்தையும் வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.
Tags :



















