ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ 900,000 ஏக்கர் நிலப்பரப்பை தீக்கிரையாகியுள்ள.ன

by Admin / 12-01-2026 02:00:06am
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ  900,000 ஏக்கர் நிலப்பரப்பை தீக்கிரையாகியுள்ள.ன

ஆஸ்திரேலியா,விக்டோரியாவில் ஏற்பட்டகாட்டுத்தீ கிட்டத்தட்ட 900,000 ஏக்கர் நிலப்பரப்பை விவசாய நிலங்களையும் காடுகளையும் எரித்து அழித்துள்ளது.சுமார் 300-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன. லோங்வுட் , ஹார்கோர்ட்மற்றும் ரஃபி போன்ற நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.லோங்வுட் பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.விக்டோரியா அரசு 19 உள்ளூர் பகுதிகளுக்கு "பேரிடர் நிலை" பிரகடனப்படுத்தியுள்ளது.சுமார் 38,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிய கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றினால், இந்தத் தீ வேகமாகப் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வெப்பம் சற்று குறைந்திருந்தாலும், 10-க்கும் மேற்பட்ட பிரதான காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ  900,000 ஏக்கர் நிலப்பரப்பை தீக்கிரையாகியுள்ள.ன
 

Tags :

Share via

More stories