”நான் பேசும்போது என்னை பாருங்க” - கூட்டத்தில் கடுப்பான அமைச்சர் நேரு

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (பிப்.,14) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அமைச்சர் கேஎன் நேரு தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் 2 பேர் தனியாக பேசி கொண்டிருந்ததைப் பார்த்து கடுப்பான அமைச்சர், ‛‛ஏங்க.. உங்களுக்கு என்ன வேண்டும்?. நீங்க 2 பேரும் தனியாக பேசுறீங்க?. நான் பேசும்போது என்னை பாருங்க. இவ்வளவு பேர் முன்னால் தப்பா பேசினால் சங்கப்படுவீங்க'' என காட்டமாக பேசினார்.
Tags :