ஓ. பன்னீர்செல்வம்  டெல்லி பயணம்

by Editor / 25-07-2021 11:01:25am
ஓ. பன்னீர்செல்வம்  டெல்லி பயணம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.தேர்தலுக்கு பின் முதன்முறையாக அவர் டெல்லி செல்கிறார்.அதன்படி,நாளை காலை 10 மணிக்கு மேல் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின்போது,தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் மேகதாது அணை குறித்து பிரதமரிடம் அவர் முறையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்,தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும்,அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவினருக்கு வாய்ப்பு கொடுக்காதது பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விவாதிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories