இன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரை திருப்பரங்குன்ற சுப்பிரமணியசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

by Admin / 01-03-2026 12:45:05am
இன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரை திருப்பரங்குன்ற சுப்பிரமணியசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  மதுரையில் நடக்க போகும் என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தாா். அவரை தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.  ஆளுநர் மாளிகைலிருந்து பிரதமர்  நான்கு மணி அளவில் மதுரை திருப்பரங்குன்ற சுப்பிரமணியசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். அடுத்து என். டி .ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு டெல்லி திரும்புகிறார். பிரதமரின் வருகையை ஒட்டி திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட காவலர்கள் பணியாரமடுத்தப்பட்டுள்ளனர், கோவிலின் உட்புறம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் முழுமையாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். பாதுகாப்பு கருதி கோவில் முழுவதும் நவீன ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பல அடுக்கு கண்காணிப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரை திருப்பரங்குன்ற சுப்பிரமணியசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.
 
Tags :

Share via