இன்று தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் 73- வது பிறந்த நாள்- அண்ணா - கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் கூவி மரியாதை

by Admin / 01-03-2026 10:54:01am
இன்று   தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் 73- வது பிறந்த நாள்- அண்ணா - கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் கூவி மரியாதை

இன்று தனது 73- வது பிறந்த நாளை தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மெரினாவில் உள்ள  அண்ணா , கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் கூவி மரியாதை செலுத்தியதோடு பெரியார் திடலுக்கு சென்று பெரியாரின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழகத்தில் லட்சிய பயணத்தில் நம் கால்கள் பாதை மாறக்கூடாது ; நம் தலை யாரிடம் எதற்காகவும் தாளக்கூடாது என்று பிறந்தநாள் உறுதி மொழியை பதிவு செய்து உள்ளார். முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர் ஆர் .என் .ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவதை தவிர்த்து மக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

 

Tags :

Share via