பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 56,405.84 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியதும் 265 புள்ளிகள் உயர்ந்து 56,731 புள்ளிகளுடன் வர்த்தகமானது.
பங்குச்சந்தையின் இடையில் அதிகபட்சமாக 550 புள்ளிகள் உயர்ந்து 56,955.09 வர்த்தகமானது. குறைந்சபட்சமாக 56,539.32 புள்ளிகளுடன் வர்த்தகமானது.
தற்போது 10 மணி நிலவரப்படி வர்த்தகம் சென்செக்ஸ் புள்ளிகள் 210 புள்ளிகள் உயர்ந்து 56,615.95 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி இன்று காலை 10 மணி நிலவரப்படி 30.65 புள்ளிகள் அதிகரித்து 16,873.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்தியா விக்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீஸ் பங்குகள் சரிந்து காணப்பட்டன. விப்ரோ, ஸ்ரீ சிமெண்ட், இந்துஸ்தான் யுனிலிவர் ஆகிய பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
மும்பை பங்குச்சந்தை கடந்த வெள்ளிக்கிழமை கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக புள்ளிகள் உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags :