ஜான் ஜெபராஜ் வழக்கு-காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

by Editor / 08-05-2025 11:00:46pm
ஜான் ஜெபராஜ் வழக்கு-காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

இளைஞர்கள் மத்தியில் கிறிஸ்துவமதத்தை புதிய பரிணாமத்தோடு  கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான மதபோதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தைவர் இவரது மனைவியின் ஊரான கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மதபோதகராகவும் செயல்பட்டு வரு கூறப்படுகிறது.கடந்த 2024-ம் ஆண்டு மே 21-ம் தேதி மத போதகர் ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி விக்டோரியா கெளரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

 

Tags : ஜான் ஜெபராஜ் வழக்கு-காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Share via