20,000ரூபாய் செல்போனை  காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாட்டி

by Editor / 29-09-2021 03:49:36pm
20,000ரூபாய் செல்போனை  காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாட்டி


சாலையில் கிடந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல் போனை காவல் நிலையத்தில் வயதான பாட்டி ஒருவர் ஒப்படைத்த சம்பவம் வியப்பில் ஆழ்த்தியில் உள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த கறுப்பம்மாள் என்ற மூதாட்டி வேலந்தாளாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது செல் போன் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.அதனைப்பார்த்த அந்த பாட்டி உடனே அருகில் உள்ள க.க.சாவடி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று அங்குள்ள காவலரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து காவல் அதிகாரிகள் அந்த செல் போனை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் அந்த பாட்டியின் செயலை பாராட்டி போலீசார் அவருக்கு பொன்னாடை போர்த்தி வழியனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via

More stories