தேர்தல் பத்திரம் விவகாரத்தில் ஊழல் செய்த பாஜக - கனிமொழி கருணாநிதி காட்டம்

by Editor / 29-03-2024 09:19:49am
தேர்தல் பத்திரம் விவகாரத்தில் ஊழல் செய்த பாஜக - கனிமொழி கருணாநிதி காட்டம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் சார்பில்  ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு உள்ள திமுக வேட்பாளர் பிரகாஷ் ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரித்தார். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, வாக்குகளை சேகரித்தார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்கப் பிரச்சாரம் செய்கிறார்.

இதில் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், செய்தி மற்றும் விளம்பரம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பே.சுவாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், வெள்ளக்கோயில் நகர செயலாளர் முருகானந்தம், வெள்ளக்கோயில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்த தேர்தலில் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று, நாம் இங்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களை அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக மத, ஜாதி பிரிவினை ஏற்படுத்தி, மக்களைப் பிரித்துப் பார்க்கிறது. 

இந்த ஒன்றிய அரசு அடித்தட்டு மக்களுக்கு எதிரானது, விவசாய மக்களுக்கு எதிராகக் கொண்டு வந்த சட்டத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய போது ஒரு அமைச்சரின் மகன் அவர்கள் மீது கார் ஏற்றினர்.  சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம். அதற்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுக. பாஜகவை விட்டுப் புரிந்ததாகக் கூறும் எடப்பாடி இப்போது எங்காவது மோடி பற்றியோ, அவர்களின் ஊழல்கள் குறித்தோ பேசுகிறாரா? இல்லை.

நாம் எந்த திட்டம் கேட்டாலும், அதற்கு நிதி வழங்குவது கிடையாது, விமான நிலையம் வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்றால் நிதி இல்லை என்று கூறும் மோடி, அம்பானி வீட்டுத் திருமணத்திற்காக ஓர் சிறு விமான நிலையத்தை 10 நாளில் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றினார்கள்.

நாம் 1 ரூபாய் வரியாக செலுத்தினால், நமக்கு 26 பைசா தான் திரும்ப அளிக்கின்றனர், இந்த நிதி பகிர்விலும் இந்தியாவிலே முன்னோடி மாநில தமிழ்நாடு மாற்றி உள்ளார் நாம் முதலமைச்சர். பத்திரம் மூலம் இவ்வளவு பெரிய ஊழல் செய்ய முடியுமா என்னும் அளவிற்கு பாஜக, தேர்தல் பத்திரம் விவகாரத்தில் ஊழல் செய்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஊழல் வழக்கில் கைது செய்துள்ள அமலாக்கத்துறை, அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, அப்ரூவலராக மாறிய சரத் சந்திர ரெட்டி என்பவர் கைது செய்யப்பட்ட சில நாட்கள் பின் பாஜகவிற்கு 55 கோடி மதிப்பீட்டில் தேர்தல் பத்திரம் வழங்கியுள்ளார். நாம் நினைக்கும், மக்களுக்கான நல்லாட்சி நடைபெற வேண்டும் என்றால் ஒன்றியத்தில் நாம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

Tags : கனிமொழி கருணாநிதி.

Share via